பாளையங்கோட்டை வெள்ளக்கோவில் மயானத்தில் பொதுமக்கள் அமருவதற்காக உள்ள கட்டிடம் பழுதடைந்து உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான இந்த கட்டிடத்தை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.