நெல்லை மேலப்பாளையம் 48-வது வார்டு வடக்கு ரகுமானியபுரத்தில் உள்ள அடிபம்பு பழுதடைந்து இரண்டாக முறிந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அடிபம்பை பயன்படுத்த முடியாததால் போதிய தண்ணீர் கிடைக்கப் பெறாமல் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த அடிபம்பை உடனே சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.