திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கொருக்கை ஊராட்சியில் குழந்தைகள் நல மையம் சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது இந்த கட்டிடம் மது அருந்தும் இடமாக உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழந்தைகள் நல மையம் செயல் பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரல்மார்க்ஸ், கொருக்கை