ராஜாக்கமங்கலத்தில் இருந்து ஈத்தாமொழிக்கு செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் ராஜாக்கமங்கலம் துணைமின் நிலையம் உள்ளது. இந்த மின்நிலையத்தின் முன்பு பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாகராஜன், ராஜாக்கமங்கலம்.