சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த கோனேரிப்பட்டி அக்ரஹாரம் கிராமம் பொன்னம்பாளையத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிராம பஞ்சாயத்து அலுவலகம் வேலை முடிந்ததாக அவசரகதியில் திறக்கப்பட்டு பயனற்று கிடக்கிறது. இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடமும், ஊராட்சி தலைவரிடமும் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஞ்சாயத்து அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும்.
-அருள், பொன்னம்பாளையம், சேலம்.