குரங்குகள் தொல்லை

Update: 2023-02-12 18:24 GMT
விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க சீறிப்பாய்கின்றன. மேலும் தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள் கையில் இருக்கும் தின்பண்டங்களை பிடுங்கி செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகவே இப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, காப்புக்காட்டில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்