சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் பள்ளிப்பட்டி கிராமம் ஏழுமலையான் காடு தொடக்கப்பள்ளியில் சத்துணவு கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடம் சேதமடைந்து விரிசல் விழுந்து சிமெண்டு பூச்சுகள் விழுகின்றன. இதுபற்றி புகார் அளித்தும் பலன் இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சத்துணவு கட்டிடத்தை புத்துப்பித்து தர முன்வர வேண்டும்.
-அழகேசன், உப்புபள்ளம், சேலம்.