சேலம் குப்தாநகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களை துரத்தி கடிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜான், குப்தா நகர், சேலம்.