தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் பத்திரஅள்ளி ஊராட்சி பூச்சூர், ஆரல்குந்தி, புளியமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களுக்கு கட்சி வர்ணம் பூசி உள்ளனர். அரசு மின்கம்பங்களில் கட்சி பதாகைகளை கட்டி, அந்த மின்கம்பங்களுக்கு கட்சி வண்ணங்களை தீட்டி உள்ளனர். எனவே இவ்வாறு மின்கம்பங்களில் வர்ணம் பூசுவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, ஏரியூர், தர்மபுரி.