திண்டுக்கல்லை அடுத்த பள்ளப்பட்டி ஊராட்சி அந்தோணியார் தெரு மிகவும் குறுகலான தெருவாகும். இங்கு இருசக்கர வாகனங்கள் நெரிசல் இன்றி செல்வதே சிரமம். இந்த சூழ்நிலையில் அந்த தெருவில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே வேகத்தடையை அகற்ற வேண்டும்.