பெரம்பலூர் நகரப் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. இவற்றில் ஒரு சில நாய்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு பார்ப்பதற்கு அருவருப்பாக காணப்படுகிறது. இந்த நாய்களால் மற்ற நாய்களுக்கும் நோய் தொற்று ஏற்படுவதுடன், மனிதர்களுக்கும் ஏதேனும் தொற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நோய்வாய்ப்பட்ட நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.