பெங்களூரு சகாயபுரம் 15வது கிராஸ் டேவிட் சாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிநீர் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. மேலும், குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்த நிலையிலும் அந்த பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் உள்ளது. மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அந்த பள்ளத்தின் மேல் பகுதியில் பிளாஸ்டிக் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு அந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.