பெங்களூரு எச்.ஏ.எல். 2வது ஸ்டேஜ் பகுதியில் சாலையின் ஓரத்தில் கார் ஒன்று கேட்பாரற்று நிற்கிறது. அந்த கார் பல மாதங்களாக அங்கே நிற்கிறது. இதனால் அந்த சாலையில அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசாரிடம் பல முறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையில் நிற்கும் காரை அகற்ற வேண்டும்.