பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கும் பஸ் ஏறிச்செல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த பஸ் நிலையம் தற்போது வரை எந்த ஒரு புதுபித்தலும் இல்லாத பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது. போதுமான இருக்கை வசதி இல்லை. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது. இலவசக் கழிப்பிட வசதி இல்லை. ஆகையால் பொதுமக்களில் சிலர் பஸ் நிலையத்தின் உட்புறத்தினையே சிறுநீர் கழிப்பிடமாக மாற்றிவிட்டனர். இதனால் நோய்வாய்ப்படும் அபாயம் நிலவுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.