தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகில் உள்ள மேம்பால சர்வீஸ் ரோட்டில் சோலார் மின்விளக்கு பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சோலார் மின்விளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.