முல்லைப்பெரியாறு கால்வாயில் இருந்து கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் 18-ம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 18-ம் கால்வாயில் பல்வேறு இடங்களில் சிறு, சிறு உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் தண்ணீர் கசிவும் ஏற்படுகிறது. எனவே 18-ம் கால்வாயில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.