வாய்க்காலை சூழ்ந்த ஆகாயத்தாமரை

Update: 2023-02-08 16:08 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டி வாய்க்காலில் தற்போது குறைந்த அளவிலான தண்ணீர் செல்கிறது. இதில் ஆகாயத்தாமரை வளர்ந்து படர்ந்து காணப்படுகிறது. அந்த வாய்க்காலில் துணி துவைக்க மற்றும் மீன்பிடிக்க பொதுமக்கள் அடிக்கடி சென்று வருவார்கள். இதனால் அவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் படர்ந்த ஆகாயத்தாமரைையை அகற்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது.

-செல்வராஜ் அக்கியம்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்