சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு, பூதங்குடி, அகரஆலம்பாடி உள்ளிட்ட பகுதியில் கடந்த ஆண்டு சம்பா அறுவடை பணியின் போது தற்காலிக நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு விவசாயிகள் தங்களது நெல்முட்டைகளை விற்பனை செய்து பயன் அடைந்தனர். ஆனால் இந்தாண்டு மேற்கண்ட இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.