தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதூரில் அவசர உதவிக்காக திறக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. அதன் வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. அந்த பகுதியில் குப்பைகள் அதிகம் காணப்படுகிறது. எனவே செடி, கொடிகளை அகற்றி சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-சுரேஷ் சி.எம்.புதூர், தர்மபுரி.