நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மாவடியில் இருந்து டோனாவூர் செல்லும் சாலையில் உடையடிதட்டு பகுதியில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே அங்கு வாறுகால் அமைத்து கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.