ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-19 16:59 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வேலாயுதநகர் மெயின் ரோட்டிற்கு மேற்கு புறத்தில் உள்ள வடமன் குட்டை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையரால் முதல் நோட்டீஸ், 2-ம் நோட்டீஸ் அனுப்பி சுமார் 2 மாதங்கள் ஆகிறது. ஆனால் இது நாள் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இது குறித்து சம்மந்தபட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்த குளத்தினை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்