சங்கராபுரம் அருகே சோழம்பட்டு குளத்து மேட்டுத்தெருவில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டியது அவசியம்.