திருவாரூர் மாவட்டம் கல்யாணமாதேவி அருகே உள்ள பூந்தாலன்குடியில் மாங்குடி செல்லும் சாலையில் நூலகம் ஒன்று உள்ளது. இந்த நூலக கட்டிடம் முறையான பராமரிபின்றி காணப்படுகிறது. இதன்காரணமாக கட்டிடத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், மழைநீர் கசிந்து நூலகத்துக்குள் புகுந்துவிடுகின்றன. மழைநீர் கசிவால் கட்டிடமும் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் வாசகர்கள் அச்சத்துடன் நூலகத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலக கட்டிடத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
படம் இல்லை