சுகாதார சீர்கேடு

Update: 2023-02-05 12:24 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஆர்.வி.நகர் 4-வது தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரால் அந்த பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கழிவுநீரை அகற்றவும், இனி வரும் காலங்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்