குடிநீர் குழாய் உடைப்பு விளைநிலங்கள் பாதிப்பு

Update: 2023-02-05 12:17 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சியில் அய்யாநல்லூர் உள்ளது. இங்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளன. இதில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி விளைநிலத்துக்குள் செல்கின்றன. இதனால் பயிர்கள் அழுகி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து விளைநிலத்துக்குள் தண்ணீர் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்