தென்காசி அருகே மேலகரம் பேரூராட்சி 14-வது வார்டு குடியிருப்பு சா்ச் தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளதாக முருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அந்த சின்டெக்ஸ் தொட்டியின் மின்மோட்டாரை பழுது நீக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.