பாலம் அமைக்கும் பணி விரைந்து நிறைவேற்றப்படுமா?

Update: 2023-02-05 09:59 GMT

ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருந்து ராமன்குடி செல்லும் சாலையில் ஓடையின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனால் அதன் அருகில் தற்காலிக மண் சாலை அமைத்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தற்போது பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்