பண்ருட்டி தாலுகா புதுப்பேட்டை அருகே ஆண்டிக்குப்பம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு வரும் மதுபிரியர்கள் குடித்துவிட்டு போதை தலைக்கு ஏறியதும் ஆபாசமாக பேசுவது, பள்ளி, கல்லூாி முடிந்து வீடு திரும்பும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மாணவிகள் அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.