தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெனசி- பொம்மிடி ரோட்டில் குண்டல்மடுவு அருகே தீரன் சின்னமலை நகர் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் மழை காலங்களில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.