ஊட்டி காந்தலில் எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. மேலும் வேகத்தடை இல்லாததால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க பென்னட் மார்க்கெட் முதல் முக்கோணம் வரை வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.