பெங்களூரு கலாசிபாளையா மெயின் ரோட்டில் நடைபாதையில் புதிதாக கற்கள் பதிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்காரணமாக நடைபாதையில் கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் அங்குள்ள வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தாமதமாகும் நடைபாதை பணியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடைபாதை பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.