பெங்களூரு கே.சன்னசந்திரா கிரீன் கார்டன் ரோட்டில் சாலையோரம் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிட கழிவுகள் வாகன ஓட்டிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் புழுதி பறப்பதால் சுவாச கோளாறு ஏற்படுவதுடன் விபத்து நிகழும் அபாயமும் உள்ளது. இதனால் மாநகராட்சி இந்த கட்டிட கழிவுகளை அகற்றுவதுடன், அங்கு இனிமேல் இதுபோன்ற கட்டிட கழிவுகள் கொட்டப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.