நாகர்கோவிலில் இருந்து திசையன்விளை வழியாக திருச்செந்தூருக்கு செல்லும் பஸ்கள் இரவு 9 மணிக்கு பிறகு திசையன்விளை பஸ் நிலையத்துக்கு செல்லாமல் காமராஜர் சிலை அருகில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதாக முருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து தற்போது அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றன. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.