ரோட்டில் சுற்றித்திரியும் குதிைர

Update: 2023-01-29 17:04 GMT

அந்தியூர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குதிரைகள் ரோட்டில் சுற்றி திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சில சமயங்களில் குதிரைகள் காலால் எத்துகின்றன. இதனால் ேராட்டில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் செல்லவேண்டிய நிைல உள்ளது. எனவே ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்