நாகை நகர் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன. வெளிப்பாளையம், புதிய பஸ் நிலையம், அக்கரைப்பேட்டை, பழைய பஸ்நிலையம் போன்ற பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சென்று அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி சென்று கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உ்ரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டம் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை.