இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை

Update: 2022-07-19 13:54 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு ஊராட்சி புதுத் தெருவில் அமைந்துள்ள ரேஷன் கடை கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து இடிந்து விடும் நிலையில் உள்ளது. மேலும் கட்டிடத்தின் கம்பிகள் வெளியே நீட்டி கொண்டு உள்ளன. இதனால் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். . இந்த கட்டிடத்திற்கு அருகில் பள்ளிக்கூடம்,ஊராட்சி நூலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அசிக்காடு

மேலும் செய்திகள்