பெங்களூரு சிக்கலசந்திரா பகுதியில் உத்தரஹள்ளி செல்லும் சாலையில் நடைபாதை ஒன்று உள்ளது. அந்த நடைபாதையை மாணவர்கள் உள்பட பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் குறுக்கே பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் சில சமயங்களில் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிகழ்வும் நடக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் செயல்பட்டு பேனரை அகற்ற வேண்டும்.