புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-01-25 12:45 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மூப்பன்பட்டி கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் எளிதில் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று பாலமுருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்