கடலூர் மாவட்டம் மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மா.குடிகாடு கிராமத்தில் உள்ள ஓடையை சுற்றி 10 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தகுந்த பராமரிப்பு இல்லாத காரணத்தால் தடுப்பணை சேதமடைந்தது. இதன் காரணமாக ஓடையில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.