பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சியில் உள்ள சிறுவர் பூங்கா எந்நேரமும் திறந்தே கிடப்பதால், சமூக விரோதிகள் பூங்காவிற்குள் புகுந்து விளையாட்டு உபகரணங்களை சேதப்படுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி வருகிறது. எனவே பூங்காவை தினமும் பூட்டி பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.