தினத்தந்திக்கு நன்றி

Update: 2023-01-22 17:51 GMT
விக்கிரவாண்டி தாலுகா சூரப்பட்டு முதல் அனந்தபுரம் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாாிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்