விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கொசுத்தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் கடிப்பதால் பொதுமக்களுக்கு பல வித நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே மரக்காணம் பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.