நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாற்றுப்பாதை அடிவாரத்தில் முள்ளுக்குறிச்சியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியின் எதிரே நிழற்கூடத்தில் ஜன்னல், கான்கிரீட் தளம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மதுபிரியர்கள் பாட்டில்களை அங்கே போட்டும், பொருட்களை நெருப்பு வைத்து எரித்தும் சென்றுள்ளனர். இதனால் இந்த பயணிகள் நிழற்கூடம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நாராயணன், முள்ளுக்குறிச்சி, நாமக்கல்.