பெங்களூரு மாகடி ரோடு அருகே சிக்பேட்டை செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தம் அருகே உள்ள நடைபாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் நடைபாதை பகுதியில் கட்டுமான பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. தற்போது பணிகள் நிறைவடைந்து பல நாட்கள் ஆகிவிட்டது. எனினும், மணல் குவியல் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக அந்த பணிகளை முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.