பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பகுதியில் இருந்து மெஜஸ்டிக் வரும் காட்டன்பேட்டை சாலையின் ஓரத்தில் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையில் உள்ள மின்கம்பங்களில் சிலர் பேனர்களை கட்டி தொங்கவிட்டனர். தற்போது அந்த பேனர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் நடைபாதையில் செல்லும் பாதசாரிகள் மீது எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு பேனர்களை அகற்ற வேண்டும்.