கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் பல பகுதிகளில் கோழிக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. குறிப்பாக முனீஸ்வரன் கோவில் எதிர்புறத்தில் கோழிக்கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இவற்றை தின்று கடந்த மாதம் அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இறந்துள்ளன. இந்த கோழிக்கழிவுகளை இரவு நேரத்தில் சிலர் மூட்டைகளாக கட்டி வந்து போட்டுவிட்டு செல்கிறார்கள். இவ்வாறு சாலையோரத்திலும் குடியிருப்பு பகுதியிலும் கோழிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.