விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி-கீழகோதைநாச்சியார்புரம் சாலை அருகே பட்டாசு ஆலை எதிர்புறம் செல்லும் தெருவில் பன்றிகள் அதிக அளவில் நடமாடுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் பன்றிகள் நடமாட்டதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நடமாடும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.