தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா துவரங்குறிச்சியில் இருந்து மஞ்சவயல், மறவக்காடு செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் வசதிக்காக ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகையில் மறவக்காடு என்பதற்கு பதிலாக ம'ர'வக்காடு என எழுத்து பிழையுடன் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட ஊர் பெயர் பலகையில் உள்ள எழுத்துபிழையை திருத்த நடவடிக்கை எடுப்பார்களா?