அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

Update: 2023-01-18 16:01 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பேட்டைபாளையம் பஞ்சாயத்தில் மேற்கே செல்லும் சாலையில் மயானம், திடக்கழிவு மேலாண்மை மையம், பொது சுகாதார கழிவறை போன்றவை அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இல்லாமல் மயானம், கழிவறைகள் சேதமடைந்து உள்ளன. தற்போது சாலை ஓரமாகவே இறந்தவர் உடல் புதைக்கப்படுகிறது. குப்பை கொட்டப்படுகிறது, தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

-சங்கர், மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்