பெங்களூரு ஒகலிபுரத்தில் இருந்து மாகடி ரோடு செல்லும் சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த மேம்பாலத்தையொட்டி உள்ள நடைபாதை மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. அதாவது நடைபாதையின் சிமெண்டு கற்கள் பெயர்ந்து, நடைபாதை மணல் மேடாக காட்சி அளித்து வருகிறது. பெயர்ந்து கிடக்கும் நடைபாதை சிமெண்டு கற்களால் பாதசாரிகளின் கால் விரல்களில் காயங்கள் ஏற்படுவது நிச்சயம். இதனால் அந்த நடைபாதையை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.